இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் 'ஆதிபுருஷ்'. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இப்படம் ராமாயணத்தை தழுவி உருவாகிறது. இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
'ஆதிபுருஷ்' படத்தில் இணைந்த அனுஷ்கா ஷர்மா? - Latest cinema news
'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷ்கா
இந்நிலையில், இதில் சீதை கதாபாத்திரத்தில் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்புதான் நடிகை அனுஷ்கா ஷர்மா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.