தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நிசப்தம்' ஆக வெளியாகும் அனுஷ்கா படத்தின் டீஸர்!

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' படத்தின் டீஸர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

anushka

By

Published : Oct 27, 2019, 1:25 PM IST

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஓவியர் சாக்ஷி கதாபாத்திரத்தில் அனுஷ்காவும் மாதவன் ஆண்டனி என்னும் பிரபல இசைக்கலைஞர், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நிசப்தம் படத்தின் டீஸர் அனுஷ்காவின் பிறந்தநாளன நவம்பர் 7ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details