தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ட்விட்டரில் மோதிக்கொண்ட பிரபல நடிகர்கள் - அனுராக் காஷ்யப்

நடிகர்கள் அனுராக் காஷ்யப்பும், அனில் கபூரும் ட்விட்டரில் நேற்று (டிச. 06) முதல் வாக்குவாதம் செய்துவருகின்றனர்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

By

Published : Dec 7, 2020, 10:59 AM IST

நடிகர், நடிகைகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் நடிகர் அனுராக் காஷ்யப்பும், அனில் கபூரும் நேற்று (டிச. 06) முதல் ட்விட்டரில் மோதிவருகின்றனர்.

எப்படி ஆரம்பித்தது விவாதம்?

அனில் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி க்ரைம் சீரிஸ் 48ஆவது சர்வதேச எமி விருதில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பதிவில், ”நான் ஏற்கனவே டெல்லி க்ரைம் பற்றி கூறியுள்ளேன். இந்த விருதைப் பெற அவர்கள் தகுதியானவர்கள். நம் நாட்டு மக்கள், சர்வேதச அளவில் விருது பெற்றுள்ளதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதைக் கண்ட அனுராக் காஷ்யப் உடனே அப்பதிவில், “இதுபோன்று தகுதியானவர்கள் விருது வாங்குவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. சரி, உங்கள் ஆஸ்கர் விருது எங்கே அல்லது நாமினேஷனாவது உண்டா?" என்று மிகவும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அனில் கபூர், “நீங்கள் எல்லாம் ஆஸ்கர் விருதை ’ஸ்லம்டாக் மில்லியனரை’ தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான்”. (அவர் மறைமுகமாக அனுராக் நடித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்றும், அவருக்கு விருது கிடைக்காததை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்)

தொடர்ந்து அதற்குப் பதிலளித்த அனுராக், ” k-k-k(ஷாருக்கான்) தனக்கு வரும் பட வாய்ப்பை விட்டுக்கொடுப்பதால்தான், உங்களுக்குப் பட வாய்ப்பு கிடைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அனில், “நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. வேலைதான் முக்கியம். வேலைதேடி நான் மண்டையை பிச்சிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்றார். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில், “நீங்க முடியைப் பற்றி பேசாதீங்க. ஏனென்றால் அதனால்தான் உங்களுக்குப் பட வாய்ப்பு வருகிறது” என்று மாறி மாறி விவாதம் செய்தனர்.

இதைக் கண்ட நெட்டிசன்கள், இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள, ’AK vs AK’ படத்தின் புரொமோஷனுக்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details