தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலியல் வழக்கு - விசாரணைக்காக நேரில் ஆஜரான அனுராக் காஷ்யப்! - MeToo allegations

மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அதுதொடர்பான விசாரணைக்காக அவர் வெர்ஸோவா காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளர்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

By

Published : Oct 1, 2020, 1:15 PM IST

பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் மீது சில நாள்களுக்கு முன்பு நடிகை பயால் கோஷ் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அனுராக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இதையடுத்து, நடிகை பயால் கோஷ் மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் இயக்குநர் அனுராக் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இருப்பினும் இதுதொடர்பாக காவல் துறையினர் அனுராக் காஷ்யப்பிடம் விசாரணை செய்யவில்லை என்ற கூறி, பயால் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவை சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து இயக்குநர் அனுராக் காஷ்யப், இன்று (அக்.01) வெர்ஸோவா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யப், பயால் தொடுத்த வழக்கு தொடர்பாக தற்போது வெர்ஸோவா காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை பயால் கோஷ், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகர் விஷாலின் 'சக்ரா' படம் ஓடிடி-யில் வருமா?: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details