தேவ்-டி, பாம்பே வெல்வெட் போன்ற பல படங்களை இயக்கி புகழ்பெற்றவர் அனுராக் காஷியப். இவர் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்களில் முக்கியமானவர்.
'சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க': ரஞ்சித்திற்கு பாலிவுட் இயக்குநர் அழைப்பு!
'கலா' படத்தைப் பார்த்து வியந்த பிரபல பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், மும்பையில் இயக்குநர் ரஞ்சித்துக்கு விருந்தளித்திருக்கிறார்.
சமீபத்தில் காலா படத்தைப் பார்த்த இவர், மும்பையில் இயக்குநர் ரஞ்சித்தை அழைத்து விருந்தளித்திருக்கிறார். பின்னர் "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளார்.
"உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'காலா', 'பரியேறும் பெருமாள்' குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்" என இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.