தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகையும், உதவி இயக்குநரும் நான்தான்: அனுபமாவின் அடுத்த அவதாரம் - ஷம்சு சாய்பா

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கும் மலையாளப் படத்தில் துணை இயக்குநராக அனுபமா பரமேஸ்வரன் பணியாற்றுகிறார்.

File pic

By

Published : May 30, 2019, 12:15 PM IST

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'பிரேமம்' படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இதன்பின் சில மலையாளப் படங்களில் நடித்தார். பின் தமிழில் தனுஷூடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகர் துல்கர் சல்மானின்செந்த தயாரிப்பில் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் அனுபமா கதாநாயகியாக நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாது அப்படத்தில் உதவி இயக்குநராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.

அனுபமா பரமேஷ்வரன் இன்ஸ்டாகிராம்

இதுகுறித்து அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'துல்கரின் முதல் தயாரிப்பான இப்படத்தில் ஷம்சு சாய்பா இயக்கத்தில் இயக்குநராகப் பணிபுரிவதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இப்படக்குழுவை மிகவும் நேசிக்கிறேன். ஒரு படத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு அங்குலமாக இருந்து ரசிப்பது எனக்குப் புது அனுபவமாக இருக்கிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களை அப்டேட் செய்கிறேன் எனக்கு உங்களது அன்பும் ஆசீர்வாதமும் தேவை. நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details