சமீபத்தில் வெளியான 100 படத்தை தொடர்ந்து, கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் வெளியான நின்னுக்கோரி படத்தின் ரீமேக் ஆகும்.
'96' ஜானு சாயலில் 'பிரேமம்' மேரியா...! - திரிஷா
அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
குடும்ப உறவுகளை மையப்படுத்தி வரும் இப்படத்தில் அதர்வா பிஎச்டி பட்டதாரியாகவும், அனுபமா பாரத நாட்டிய டான்ஸாராகவும் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், அனுபமா இது வரை நடிக்காத கதாபாத்திரம் என்பதால் அவருக்கு நிச்சயம் இப்படம் புது அனுபவத்தை தரும். 96 ஜானு கதாபத்திரத்தின் பாதி சாயல் அனுபமாவிற்கு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இப்படத்தில் அதர்வா அனுபமாவுடன் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 96 படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம், இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.