தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மகா சமுத்திரம்' படத்தில் இணைந்த சிவாகார்த்திகேயன் பட நடிகை! - Maha Samudram movies

சென்னை: 'மகா சமுத்திரம்' படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து சிவாகார்த்திகேயன் பட நடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனு இமானுவேல்
அனு இமானுவேல்

By

Published : Oct 19, 2020, 12:40 PM IST

தெலுங்கில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'ஆர்.எக்ஸ்.100' என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குநர் அஜய் பூபதி. இதைத்தொடர்ந்து இவர் தற்போது சர்வானந்தை நாயகனாக வைத்து 'மகா சமுத்திரம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இவருடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரத்தில், நடிகர் சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிக்க அதிதி ராவ் ஹைதாரி ஒப்பந்தமாகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தற்போது இப்படத்தில் கூடுதலாக நடிகை அனு இமானுவேல் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு நாயகிகளுக்கும் சம்மான அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகை அனு இமானுவேல் கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்திருந்தார். விரைவில் 'மகா சமுத்திரம்' படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:நடிகர்கள் 30% சம்பளத்தை குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details