தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#BigilRelease - திருச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சி! - Mega Star Cinemas

'பிகில்' படத்தை திரையிட முடியவில்லை என முக்கிய திரையரங்குகள் சில வருத்தம் தெரிவித்திருக்கின்றன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Bigil

By

Published : Oct 21, 2019, 5:20 PM IST

'பிகில்... பிகில்... பிகில்...!' என படம் ரிலீசாவதற்கு முன்பே ஆரவாரம் அதிகமாக இருக்கிறது. அப்போ படம் ரிலீசானால் 'பிகில்' சத்தம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

படத்திற்கான ரிலீஸ் வேலைகள் முடிந்து, மக்கள் பார்வைக்கு வருவது மட்டும்தான் மீதம் உள்ளது. பல திரையரங்குகளும் பிகிலை வாங்க போட்டாபோட்டி போட, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ஜி.கே. சினிமாஸ், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் 'பிகில்' படத்தை திரையிட முடியவில்லை எனக் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள மெகா ஸ்டார் சினிமாஸ் திரையரங்கமும் 'பிகில்' படத்தை திரையிட முடியவில்லை என்று பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: ரொனால்டோ மெஸ்ஸிலாம் வீட்டுக்கு போயிடுங்க... 'பிகில்' ஆடும் புட்ஃபால் வெறித்தனம்!

ABOUT THE AUTHOR

...view details