தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பீப் பாடல் விவகாரம்; சிம்பு மீதான மற்றொரு வழக்கும் ரத்து! - சிம்பு வழக்கு தள்ளுபடி

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்புவுக்கு எதிராக சென்னை காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பீப் பாடல் விவகாரம்; சிம்பு மீதான மற்றொரு வழக்கு ரத்து!
பீப் பாடல் விவகாரம்; சிம்பு மீதான மற்றொரு வழக்கு ரத்து!

By

Published : Feb 24, 2022, 8:27 PM IST

சென்னை: கடந்த 2015ஆம் ஆண்டு பெண்கள் குறித்து ஆபாசமாக பீப் பாடல் பாடியதாக, சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனையடுத்து சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சிம்பு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தொடர்பான மற்றொரு வழக்குப்பதிவு, இன்று (பிப்ரவரி 24) மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சிம்பு மீதான மற்றொரு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:Watch: தமிழ்நாடு எங்கும் வலிமைக் கொண்டாட்டம்...!

ABOUT THE AUTHOR

...view details