தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தும்பா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு - Thumbaa movie

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பேண்டஸி திரைப்படமான 'தும்பா', வரும் மே 17ஆம் தேதி வெளியாகிறது.

தும்பா போஸ்டர்

By

Published : May 2, 2019, 8:12 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பேண்டஸி திரைப்படம் 'தும்பா'. இப்படம் குடும்பம் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கனா படப்புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். மூத்த நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஜய் டிவி புகழ் தினா, காமெடி வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவை நரேன் இளனும், படத்தொகுப்பை கலைவாணனும் கவனிக்கின்றனர். ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் ஏ.ஆர். வசனம் எழுதியுள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற திரைப்படங்களில் துரை செந்தில்குமாரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிஷ் ராம் LH இயக்குகிறார்.

தும்பாவில் ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைக்கிறார். மற்ற பாடல்களுக்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார். அடுத்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும்போது புலி வருவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

சமீபத்தில் வெளியான தும்பா படத்தின் டிரெய்லர், பெரிய வரவேற்பை பெற்றது. வனத்தில் புலிகள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடையே நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு மீண்டு வெளிவருவதையும், இந்த உலகத்தில் மனிதனுக்கு வாழ்வதற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறதோ அதேபோன்று காட்டில் வாழும் வனவிலங்குகளுக்கும் உரிமை இருக்கிறது என்பதை வலியுறுத்தும் விதத்திலும் அமைந்திருந்தது. இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் மே 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை முன்னணி வெளியீட்டு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.

ABOUT THE AUTHOR

...view details