தமிழ்நாடு

tamil nadu

அப்போ விஜய்க்கு... இப்போ விஜய் சேதுபதிக்கு - ஆல்பம் உருவாக்கும் ஸ்ரீதர் மாஸ்டர்

By

Published : Jul 20, 2020, 1:40 PM IST

சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்கு 'அண்ணே வெயிட்டு வெயிட்டு' என்னும் ஆல்பம் ஒன்றை டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உருவாக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

திரையுலகில் உள்ள முக்கியமான நடன இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீதர் மாஸ்டர். தனது தனித்துவமான நடனத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர்.

இவர் கடந்த சில நாள்களுக்கு முன் இளையதளபதி விஜய்க்கு ’ரசிகனின் ரசிகன்’ என்ற ஆல்பம் ஒன்றை உருவாக்கி அவருக்குச் சமர்ப்பணம் செய்தார். அந்த ஆல்பம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ’அண்ணே வெயிட்டு வெயிட்டு’ என்ற ஆல்பம் பாடலை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரீதர் மாஸ்டர் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்த ஆல்பத்தின் தயாரிப்புப் பணிகள் முடிந்ததும், இந்தப் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details