திரெளபதி பட இயக்குநர் ஜி. மோகன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. நடிகர் ரிஷி ரிச்சர்ட், கௌதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் சிறப்புக் காட்சியை நேற்று (செப். 27) சென்னை சாலிகிராமத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ராதா ரவி ஆகியோர் பார்த்துப் பாராட்டினர்.