தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'உஷ்ஷ்... திரை விமர்சனத்துக்கு கப்..சிப்!' - அண்ணாமலை - சினிமா அண்மைச் செய்திகள்

திரை விமர்சனங்களைத் தவிர்த்து, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.

'உஷ்ஷ்... திரை விமர்சனத்துக்கு கப்..சிப்!' - அண்ணாமலை அறிவுறுத்தல்!
'உஷ்ஷ்... திரை விமர்சனத்துக்கு கப்..சிப்!' - அண்ணாமலை அறிவுறுத்தல்!

By

Published : Nov 28, 2021, 6:43 PM IST

தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியான 'ஜெய் பீம்' உள்பட பல்வேறு திரைப்படங்களை பாஜக முக்கிய பிரமுகர்கள் சிலர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திரைவிமர்சனங்கள் குறித்து கட்சித் தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து நேற்றைய (நவ.27) தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கப்...சிப்...!

அதில்,“திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர, சகோதரிகள், சிலநேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கூறும் கருத்துகள் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது, எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்!

நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள், கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'செல்லத்துக்கு ஜல்ப் பிடிச்சுக்க போகுது...'- சாக்‌ஷி அகர்வால் ரசிகர்கள் கதறல்!

ABOUT THE AUTHOR

...view details