அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், விஜய் சேதுபதி, டாப்ஸியை வைத்து இயக்கியிருக்கும் படம் 'அனபெல் சேதுபதி'. இப்படத்தில் ராதிகா, யோகிபாபு, ஜெகதிபாபு, வெண்ணிலா கிஷோர், சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ் மேனன், தேவதர்ஷினி, சுரேகாவாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில், சுதன் தயாரிக்கிறார். ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்பூரில் நிறைவுபெற்றது.
கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் கிஷோர் இசையமைத்துள்ளார். போன ஜென்மத்தைக் கிளறும் பீரியட் கால ஃப்ளாஷ் பேக் படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ராஜாவாக நடிக்கிறார்.