தமிழ்நாடு

tamil nadu

அனபெல் சேதுபதி படம் எப்படி இருக்கும்? - இயக்குநர் சுவாரசிய தகவல்

By

Published : Sep 15, 2021, 12:38 PM IST

அனபெல் சேதுபதி படத்தில் கருத்து கிடையாது மிகவும் ஜாலியாக அனைவரும் பார்க்கும் படமென படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அனபெல் சேதுபதி
அனபெல் சேதுபதி

தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம், 'அனபெல் சேதுபதி'. டாப்ஸி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா, யோகிபாபு, ஜெகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி ராஜாவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (செப் 14) சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

அனபெல் சேதுபதி

இதில் இயக்குனர் தீபக் சுந்தரராஜன் அவரது தந்தையும், நடிகருமான ஆர்.சுந்தரராஜன் கலந்துகொண்டனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் தீபக் சுந்தரராஜன், "அனபெல் சேதுபதி படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. பேன்டஸி காமெடிதான் இப்படம். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இது உருவாகியுள்ளது. தலைப்பு கேட்டு விஜய் சேதுபதி நன்றாக இருப்பதாகக் கூறினார்.

அனபெல் சேதுபதி

மேலும் அப்பாவின் படங்கள் போன்று என்னால் படம் இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. இப்படத்தில் கருத்து எதுவும் கிடையாது. ஜாலியாக பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது வந்துள்ளது. 'அனபெல் சேதுபதி' வரும் 17ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது" என கூறினார்..

ABOUT THE AUTHOR

...view details