ரஜினி நடிப்பில், தீபாவளியன்று, (நவம்பர் 4ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியான படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
'அண்ணாத்த' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் தீம் பாடலான 'வா சாமி' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாசாமி பாடலை பாடலாசிரியரும், கவிஞருமான அருண் பாரதி எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே 'விஸ்வாசம்', 'பிச்சைக்காரன்- 2', 'காக்கி', 'கடமையைச் செய்', 'கார்பன்', 'நா நா' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
'வா சாமி' பாடல் வரவேற்பைப் பெற்றதையடுத்து அருண் பாரதி கூறியதாவது, "'வாசாமி' பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.