சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'அண்ணாத்த'. கரோனா தொற்று காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறிய பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தில் ரஜினிக்கென்றே அரசியல் பஞ்ச் வசன காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அண்மையில் கரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஆனால் அங்கு நான்கு பேருக்கு கரோனா தொற்று ஏற்படவே பதறிப்போன படக்குழு உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை திரும்பியது.
இதையடுத்து ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசியல் கட்சி தொடங்கவில்லை என அறிவித்தார். தற்போது ரஜினியின் உடல்நிலை சீரான பிறகே 'அண்ணாத்த' படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என தெரிகிறது.