தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ... - அண்ணாத்த மோஷன் போஸ்டர் வெளியானது

‘அண்ணாத்த’ டைட்டிலுக்கு மாஸான இசையை தந்த இமான்; மோஷன் போஸ்டருக்கு பக்கா மாஸான இசையை கொடுத்திருக்கிறார். மோஷன் போஸ்டர் மிரட்டலாக இருக்கிறது.

ANNAATTHE MOTION POSTER RELEASE
ANNAATTHE MOTION POSTER RELEASE

By

Published : Sep 10, 2021, 6:35 PM IST

சென்னை:ரஜினி - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘தர்பார்’ படத்துக்கு பிறகு ரஜினி நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதன் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘அண்ணாத்த’ டைட்டிலுக்கு மாஸான இசையை தந்த இமான்; மோஷன் போஸ்டருக்கு பக்கா மாஸான இசையை கொடுத்திருக்கிறார். மோஷன் போஸ்டர் மிரட்டலாக இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தலைவி: யாருக்கும் "வலி" இல்லா ஒரு வாழ்க்கை வரலாறு

ABOUT THE AUTHOR

...view details