'தர்பார்' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'அண்ணாத்த' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, முறைப் பெண்ணாக குஷ்பூ நடித்துள்ளார். அதேபோல் சகோதரியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்த நிலையில், எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த அப்டேட் வெளியிடப்படுகிறது. வரும் தீபாவளியன்று வெளியாகும் 'அண்ணாத்த' படத்தைக் காண ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.