தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அம்மாடியோவ்... உலகமெங்கும் இத்தனை திரையரங்கில் வெளியாகும் 'அண்ணாத்த'!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

v
v

By

Published : Nov 2, 2021, 4:29 PM IST

Updated : Nov 2, 2021, 6:09 PM IST

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் 'பெத்தண்ணா' என்ற பெயரிலும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு ட்ரெய்லர்கள் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாகின.

தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் 'அண்ணாத்த' படத்தின் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

திரையரங்குகளின் எண்ணிக்கை

'அண்ணாத்த' படத்தின் டீசர்கள், ட்ரெய்லர் என அனைத்தும் சமூகவலைதளங்களில் நல்ல வரேவற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்பட உலகமெங்கும் 1,119 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த சேலைகள்' - விற்பனை ஜோர்!

Last Updated : Nov 2, 2021, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details