தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினியின் தாய் மாமன் யார் தெரியுமா? - ரஜினிகாந்த்

அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் தாய்மாமன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி
ரஜினி

By

Published : Sep 25, 2021, 11:43 AM IST

Updated : Sep 25, 2021, 12:49 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'அண்ணாத்த'. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், வரும் தீபாவளியன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றப்பரம்பரை, மதயானைக்கூட்டம் போன்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி ரஜினிக்குத் தாய் மாமனாக நடித்துள்ளாராம்.

அதுமட்டுமின்றி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், பெரிதாக யாரிடமும் பேசவில்லை என்றும், ரஜினியை மட்டும் பார்த்து தினமும் வணக்கம் சொல்லிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

வேல ராமமூர்த்தி

மேலும் ஒருகாட்சியில் வேல ராமமூர்த்தியும், பிரகாஷ் ராஜும் எதிரெதிரே முறைத்துப் பார்க்க வேண்டிய காட்சியில் இருவரும் கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பிரகாஷ் ராஜ்

அந்த காட்சி முடிந்த பிறகு படப்பிடிப்புத் தளத்தில் பெரிதாக யாருடனும் பேசிக் கொள்ளாத பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தியை அழைத்து இதனை இப்படியே கடைபிடியுங்கள், இங்கு இருக்கக்கூடிய எவரிடமும் அதிகமாகப் பேசாதீர்கள் உங்களைப் பயமுறுத்தி விடுவார்கள் என அன்பாக ஆலோசனை கூறினாராம்.

இதையும் படிங்க:அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ...

Last Updated : Sep 25, 2021, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details