சென்னை: நடிகர் அர்ஜூன் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர். மிகுந்த ஆஞ்சநேயர் பக்தரான இவர், தனது படங்களிலும் ஆஞ்சநேயர் பக்தராக நடித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில், கடந்த சில வருடங்களாக ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை கட்டி வருகிறார்.
நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் இதற்காக கர்நாடகாவில் இருந்து மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலையையும் கொண்டு வந்து இங்கு வைத்துள்ளார். இதன் பணிகள் பல வருடங்களாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜூலை மாதம் 1 அல்லது 2ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!