தமிழிலும் தெலுங்கிலும் செம பிஸியாக நடித்துவருபவர் நடிகை அஞ்சலி. சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாகவே இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்கள் மறக்கா வண்ணம் தனது கட்டுக்குள் வைத்திருப்பார்.
அந்தரத்தில் 'நிசப்தம்' ஆக யோகா செய்து வித்தை காட்டும் அஞ்சலி - அஞ்சலியின் யோகாசனம்
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அஞ்சலி, அந்தரத்தில் யோகா செய்வது போன்ற தனது புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
anjali
தற்போது நிசப்தம் படத்தில் நடித்துள்ள அஞ்சலி தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் வெளவ்வாலைப்போன்று அந்தரத்தில் தலைகீழாக தொங்கி யோகாசனம் செய்துள்ளார். வாழ்க்கை பேலன்ஸால் ஆனது என்று அதில் பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்த புகைப்படம் வெளியான சில நிமிடத்திலயே ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டது.