சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் தயாராகும் முழுநீள காமெடி திரைப்படம் ஒன்றில் நடிகை அஞ்சலி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வழக்கமான பூஜையுடன் தொடங்கியது.
யோகிபாபுவுடன் இணைந்து காமெடியில் கலக்கப் போகும் 'அங்காடித் தெரு' நாயகி! - Anjali join hands with yogibabu
முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார்.
![யோகிபாபுவுடன் இணைந்து காமெடியில் கலக்கப் போகும் 'அங்காடித் தெரு' நாயகி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4407790-592-4407790-1568210929263.jpg)
இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ் கூறுகையில், “விலா எலும்பு வலிக்குமளவுக்கு சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகளும் நிறைந்த கதையாக இயக்குநர் எழுதியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.
இதுவரை அஞ்சலி நடித்த வேடங்களிலிருந்து இந்த வேடம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். யோகி பாபுவும், விஜய் டிவி புகழ் ராமரும் இணைந்து காமெடியில் அதகளப்படுத்த உள்ளார்கள்” என்று கூறினார். மேலும், படத்தில் பங்கேற்கும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்து விரைவில் அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக, யோகிபாபுவும், நடிகை அஞ்சலியும் சேர்ந்து லிசா - 3டி என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.