தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நம்பிக்கையுடன் இருங்கள் விஷால் - 'லவ் ஆல்வேஸ்' அனிஷா - தமன்னா

நடிகர் விஷால் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், சமீபத்தில் இணையத்தில் பரவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Vishal

By

Published : Aug 30, 2019, 2:26 PM IST

நடிகர் விஷால் தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிவரும் 'ஆக்‌ஷன்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துவருகிறார்.

இந்நிலையில் விஷால் நேற்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களும் வந்தன.

இந்நிலையில், விஷாலின் காதலியும் அவரின் வருங்கால மனைவியுமான அனிஷா அல்லா ரெட்டியும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளபக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டார்.

அனிஷா போஸ்ட்

அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டார். நீங்கள் பிரகாசிக்க பிறந்தவர். நான் என்றென்றும் உங்கள் அழகையும் உங்கள் இருப்பையும் போற்றுவேன். நம்பிக்கையுடன் இருங்கள். லவ் ஆல்வேஸ் என்று அவர் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அனிஷா தனது சமூக வலைதளபக்கத்தில் இருந்து விஷாலுடன் நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கினார். இதனையடுத்து அவர்கள் திருமணம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் இணையத்திலும் ஊடகத்திலும் உலவிவந்தன.

தற்போது விஷாலின் பிறந்தநாளுக்கு அனிஷா வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம் அவர்களுக்கு இடையில் எந்த ஒரு பிரச்னையும இல்லை என்பது தெரியவருகிறது. இருந்தாலும் அவர்களது திருமணம் நடைபெறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

ABOUT THE AUTHOR

...view details