ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் முடிந்து மூன்று நாள்களில், வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (டிச. 03) தெரிவித்துள்ளார்.
நீண்ட நாள்களாக ரஜினியின் இந்த அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்கள், இதை சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர். மேலும் ரஜினியின் இந்த அறிவிப்பிற்குப் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.