தமிழ்நாடு

tamil nadu

#DarbarMotionPoster: 'இது தான் தரமான அப்டேட் - தர்பார் புதிய அப்டேட்டை வெளியிட்ட அனிருத்!'

By

Published : Oct 16, 2019, 3:59 PM IST

ரஜினிக்கே உரித்தான மாஸ் கதையம்சத்துடன் 'தர்பார்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரி கேரக்டரில் ரஜினி தோன்றவுள்ளார்.

darbar

'தர்பார்' படத்தில் அடுத்த சர்ப்ரைஸாக அனிருத் அட்டகாசமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார்'. 'சர்கார்' படத்திற்குப் பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

இதில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படத்தின் ஷுட்டிங் முடிவடைந்தது.

தற்போது படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில், தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் நவம்பர் ஏழாம் தேதி வெளியாகும் என்றும்; ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டாணியில் உருவான இந்தப் படம், வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

அனிருத்தின் இந்த அட்டகாசமான அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் இப்போதே பொங்கலைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். மேலும் தர்பார் மோஷன் போஸ்டருக்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

இதையும் வாசிங்க: 'தர்பார்' படத்தில் சஸ்பென்ஸ் கேரக்டரில் மற்றொரு கதாநாயகி?

ABOUT THE AUTHOR

...view details