தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தல 61'இல் இணையும் அனிருத்! - latest cinema news

நடிகர் அஜித்தின் அடுத்த படமான தல 61 படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தல 61'ல் இணையும் அனிருத்!
'தல 61'ல் இணையும் அனிருத்!

By

Published : Nov 27, 2021, 7:43 PM IST

நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், இன்னும் பெயரிடப்படாத 'தல 61' படத்தின் அப்டேட்கள் வர தொடங்கியுள்ளன.

ஏற்கனவே 'தல 61' படத்திலும் அஜித், ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணி தொடரவுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 'தல 61' படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்கு, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத், நடிகர் அஜித் படத்திற்கு இசையமைப்பது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மத்திய அமைச்சரை சந்தித்த விக்னேஷ் சிவன்! பின்னனி என்ன?

ABOUT THE AUTHOR

...view details