2018ஆம் ஆண்டு முதல் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த பாலிவுட் நடிகர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஸ்டார் அந்தஸ்திற்காக போட்டி போட்டு நடிக்கும் பாலிவுட் திரையுலகிலிருந்து தனது தனித்துவ நடிப்பால் பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த வெகு சில நடிகர்களில் இர்ஃபான் கானும் ஒருவர்.
பாலிவுட் தாண்டி உலகம் முழுவதும் உள்ள திரை ரசிகர்களைத் தனது நடிப்பாற்றலால் கவர்ந்த இர்ஃபான், 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'லைஃப் ஆஃப் பை', 'ஜுராஸிக் வேர்ல்டு', 'அமேசிங் ஸ்பைடர் மேன்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் தோன்றி உலகம் அறியும் இந்திய முகங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவந்தார்.
இந்நிலையில், ’எ மைட்டி ஹார்ட்’ திரைப்படத்தில் இர்ஃபானுடன் நடித்திருந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இர்ஃபான் குறித்த ஞாபங்களை நினைவுகூர்ந்து செய்தி வெளியிட்டுள்ளார்.