தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எனது படைப்பாற்றல் எனது குழந்தைகள்' - ஏஞ்சலினா ஜூலி - தி ஒன் அண்ட் ஒன்லி இவான்

டெல்லி: ஏஞ்சலினா ஜூலி தனது புதிய படமான 'தி ஒன் அண்ட் ஒன்லி இவான்' லைவ் ஆக்ஷன் அனிமேஷன் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

ஏஞ்சலினா ஜூலி
ஏஞ்சலினா ஜூலி

By

Published : Aug 19, 2020, 4:50 PM IST

இயக்குநர் தியா ஷாராக் இயக்கியுள்ள 'தி ஒன் அண்ட் ஒன்லி இவான்' (The One And Only Ivan) லைவ் ஆக்ஷன் அனிமேஷன் திரைப்படத்தில் ஏஞ்சலினா ஜூலி, ஸ்டெல்லா என்ற வயதான யானையின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியத்தில் வெளியாகிறது.

இப்படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஏஞ்சலினா ஜூலி, "நடிப்புலகைத் தாண்டி இதுபோன்ற படத்திற்கு நான் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது.

வெளியுலகப் பார்வைக்கு நான் மிகவும் பிஸியான நபராகத் தெரிகிறேன். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க்கையில் நான் மிகவும் சலிப்புடன் இருக்கிறேன். எனது குழந்தைகளுடன் இருக்கும்போது எனக்கு இந்த எண்ணம் தோன்றுவதில்லை.

எனது படைப்பாற்றல் எனது குழந்தைகள்தான் என நான் நினைக்கிறேன். ஆறு குழந்தைகளும் ஆறுவித திறமைகளைக் கொண்டுள்ளனர். அவர்களுடன் நான் இருக்கும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன். மேலும் எனது படைப்பாற்றலும் மேம்படுகிறது. ஒரு தாயாக எனது குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மிகவும் நேசிக்கிறேன்.

'தி ஒன் அண்ட் ஒன்லி இவான்' என்ற புத்தகத்தை எனது குழந்தைகள் வாசிக்கும்போது அதிலிருந்த கொரில்லாவின் கதாபாத்திரம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதான் என்னையும் இப்படத்தில் பணியாற்றவைக்க முக்கியக் காரணமானது.

இந்தப்படத்தில் நான் பணியாற்றியது எனக்கு அவ்வளவு ஈஸியானது இல்லை. மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் முழு வேடிக்கையாகவே இருந்தது. மேலும் எனது வாழ்வில் இது முக்கியமான ஒரு படம். இளைய தலைமுறையினர் இயற்கை குறித்து அறிந்திருக்க வேண்டும். அதுதான் இப்படத்தின் மையக்கரு.

இளைய தலைமுறையினர் உலகில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நன்கு அறிவார்கள். இந்தப் படத்தை அவர்கள் பார்ப்பதன் மூலம் இயற்கையை இன்னும் அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

மகன்கள் மடோக்ஸ், பாக்ஸ், நாக்ஸ் - மகள்கள் சஹாரா, ஷிலோ, விவியென் ஆகிய ஆறு குழந்தைகளுக்கு ஏஞ்சலினா ஜூலிதாயாக உள்ளார்.

கேத்ரின் ஆப்பில்கேட் எழுதிய 'தி ஒன் அண்ட் ஒன்லி இவான்' என்ற புத்தகத்தை தழுவியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details