தமிழ் திரையுலகிற்கு 2005ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த ஆண்ட்ரியா 'கண்ட நாள் முதல்' படம் மூலம் அறிமுகமாகினார். 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' படம் மூலம் பிரபலமானவர், தனது நடிப்புத்திறானால் மட்டுமல்லாது பாடல்களாலும் ரசிகர்களை கவர்ந்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தனுஷுடன் இணைந்து பாடிய 'உன் மேல ஆசை தான்' பாடல் பலராலும் வரவேற்கப்பட்டது.
என்னை புதிதாக உணர்கிறேன்: ஆண்ட்ரியா! - நடிகை
மன அழுத்த பிரச்னைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டேன், இப்போது என்னை புதிதாக உணர முடிகிறது என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
அதையடுத்து, வருடங்களுக்கு பல படங்களை கொடுத்து வந்தவர் கடந்த ஆண்டு 'வடசென்னை', 'விஸ்வரூபம் 2' ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்பு அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் அவரை பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆண்ட்ரியா அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தி பதிவிட்டிருந்தார். அதில், "மன அழுத்தம், உடல், மனரீதியாக பாதிப்பில் இருந்த நான், நடிப்பை நிறுத்திவிட்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டேன். காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சை சிறிது கடினம் தான், இருந்தும் கூட சிகிச்சையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். காலையில் எழுந்ததும் ஒரு கப் மூலிகை டீ அதன் பின்பு யோகா செய்வேன், அந்த நாள் இனிதே தொடங்கும். அதையடுத்து, இந்த சிகிச்சையில் இருந்து விலகிவிடலாம் என்று கூட எண்ணினேன் மருத்துவரின் அறிவுரையில் பின்பு முழுதாக என்னை ஈடுபடுத்தினேன். தற்போது என்னை புதிதாக உணர்கிறேன், மருத்துவர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.