தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆண்ட்ரியாவின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

நடிகை ஆண்ட்ரியா நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.08) பூஜையுடன் தொடங்குகிறது.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

By

Published : Oct 8, 2021, 5:04 PM IST

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைக் களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் ஆண்ட்ரியா.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.

ஆண்ட்ரியாவின் புதிய பட பூஜை

இதனையடுத்து பிசாசு 2 படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்திவருகிறார்.

சுஜாதா விஜய்குமார் தயாரிக்கும் இப்படத்தை நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்குகிறார்.

ஆண்ட்ரியாவின் புதிய பட பூஜை

இன்னும் பெயரிடாத இப்படத்தின் பூஜை இன்று (அக்.8) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்களான சந்தோஷ் பிரதாப், ஆஷா சரத், காளி வெங்கட், பாபி அண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தின் இதர அப்டேட் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஏன் ஆண்களை கேள்வி கேட்பதில்லை? - சமந்தா

ABOUT THE AUTHOR

...view details