விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இதில் மாளவிகா மோகனன், சஞ்சீவ், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என்று இன்னும் ஏராளமானோர் நடித்து வருகின்றனர். 'மாஸ்டர்' படத்தின் ஷூட்டிங் 80% முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
விஜய் கல்லூரி பேராசிரியாக நடிக்க, அவரை எதிர்த்து வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா இன்று 'மாஸ்டர்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.