தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது நிச்சயம் - மிஷ்கின் - மிஷ்கின் படங்கள்

2014ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘பிசாசு’. இந்தப் படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருந்தார். அவரிடம் உரிமை பெற்று அதே தலைப்பை வாங்கி இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்.

Pisasu two
Pisasu two

By

Published : Jun 23, 2021, 3:40 PM IST

‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில் ஆண்ட்ரியாவும் ‘பிசாசு 2’ படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

Pisasu two still

ட்விட்டர் ஸ்பேசில் ‘பிசாசு 2’ குறித்து மிஷ்கினிடம் கேட்டதற்கு, இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாது, ஆண்ட்ரியாவுக்கு இந்தப் படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

Pisasu two shooting spot

2014ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘பிசாசு’. இந்தப் படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருந்தார். அவரிடம் உரிமை பெற்று அதே தலைப்பை வாங்கி இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். பிசாசு முதலாம் பாகத்துக்கு அரோள் கரோலி இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'விஜய்க்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் கொடுப்பேன்’ - மிஷ்கின்

ABOUT THE AUTHOR

...view details