பாலிவுட்டில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, அனில் தவான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'அந்தாதுன்'.
ஒரு முன்னாள் திரைப்பட நடிகரின் கொலை மற்றும் கண்பார்வையற்ற ஒருவர் தன்னை அறியாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் திரில் நிறைந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்ததோடு, சிறந்த படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றது. அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் விருது வாங்கியது.
இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். ஆயுஷ்மான் குரானா நடித்த கண்பார்வையற்ற இளைஞர் கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்திற்கான நடிகை, பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 'அந்தாதுன்' படத்தில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அந்தாதுன் படத்தின தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தெடங்கியுள்ளது. மெர்லபகா காந்தி இயக்கத்தில் நடிகர் நித்தின் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றுள்ளது. ஸ்ரீஸ்த் மூவீஸ் சார்பாக சுதாகர் ரெட்டி, நிக்கிதா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகை, துணை கதாபாத்திரங்கள், படத்தின் பெயர் குறித்த விவரங்களை படக்குழு அறிவிக்க உள்ளது. இன்னும் பெயர் வைக்காத இப்படத்தை இந்தாண்டு ஜூன் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: 'அந்தாதுன்' படத்தில் பியானோ கலைஞராக நடிக்கும் பிரசாந்த்