நடிகர் அயுஷ்மன் குர்ரானா, நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘அந்தாதுன்’. பிளாக் காமெடி கிரைம் த்ரில்லராக உருவான இந்தப் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். கடந்தாண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய முன்று பிரிவுகளில் விருது வாங்கியது.
அதேபோல், மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த படம் ஆகியப் பிரிவுகளிலும் விருது வாங்கியது. இதனையடுத்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது.