ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில், சர்வதேச இந்திய திரைப்பட சங்கத்தின் விருது (IIFA) வழங்கும் விழாவுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த நடிகர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா, சிறந்த நடிகை பட்டியலில் தபு உட்பட 13 பிரிவுகளின் கீழ் ‘அந்தாதுன்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
#IIFA2019: அந்தாதுன் படத்துக்கு 13 விருதுகள் பரிந்துரை! - ஐஐஎப்ஏ
சர்வதேச இந்திய திரைப்பட சங்கத்தின் விருது (IIFA) வழங்கும் விழாவில் ‘அந்தாதுன்’ திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Andhadhun
இதற்கிடையே, ‘அந்தாதுன்’ படத்தை ரீமேக் செய்ய கவுதம் மேனன் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாகவும் கோடம்பாக்க வட்டாரம் கிசுகிசுக்கிறது.