சென்னை:வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் இயக்கியுள்ள படம் ’செல்ஃபி’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்துள்ளார். இப்படத்தில், கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், " 'செல்பி' படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். நீட் தொடர்பான மோசடிகள், தற்கொலைகள், கொலைகள் மற்றும் கல்லூரி கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படம்.