தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

”அன்பிற்கினியாள்” வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை - அருண் பாண்டியன்! - அன்பிற்கினியாள், அருண் பாண்டியன், வெற்றிபெறும்

தனது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில், கோகுல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படமான ”அன்பிற்கினியாள்” வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை என நடிகர் அருண்பாண்டியன் தெரிவித்தார்.

”அன்பிற்கினியாள்” வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை - அருண் பாண்டியன்!
”அன்பிற்கினியாள்” வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை - அருண் பாண்டியன்!

By

Published : Feb 28, 2021, 9:15 PM IST

நடிகர் அருண்பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ”அன்பிற்கினியாள்” திரைப்படம் மார்ச் மாதம் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படம் பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின்னர் படக்குழுவினர் பேசியதாவது :

நடிகர் அருண் பாண்டியன் திரைப்படம் குறித்து கூறுகையில், ”அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். திட்டமிட்டதை விட விரைவாகவே இதை நாங்கள் முடித்துவிட்டோம். கரோனா காரணமாக படத்தை வெளியிட தாமதமாகியது. நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இதில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இதில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இதே போல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இயக்குநர் கோகுல் பேசியதாவது, "இது எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண்பாண்டியன் சார் இதன் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச் சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப்போனதால், படத்தை நானே செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். கீர்த்தி பாண்டியன் இதில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப் படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது” என்றார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் திரைப்படம் குறித்து பேசியதாவது, "இந்தப் படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம். இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

இதையும் படிங்க :நிறைவு பெற்ற திமுக விருப்ப மனு விநியோகம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details