தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி - ஓடிடியில் அன்பறிவு! - anbarivu movie in ott

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்துள்ள அன்பறிவு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி

By

Published : Jan 7, 2022, 4:54 PM IST

'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் கோலிவுட்டில் களமிறங்கியவர் ஹிப்ஹாப் ஆதி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சிவகுமாரின் சபதம்' படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனையடுத்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் அன்பறிவு. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அஸ்வின் ராம் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் அன்பறிவு திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (ஜனவரி 7) வெளியாகியுள்ளது. முதல் முறையாக ஹிப்ஹாப் ஆதி, இரட்டை வேடத்தில் நடித்துள்ள இதில் காஷ்மீரா, நெப்போலியன், விதார்த், சரத்குமார், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களைக் கவரும் எனப் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடல் கன்னியாக கலக்கும் ஆண்ட்ரியா

ABOUT THE AUTHOR

...view details