2013ஆம் ஆண்டு கதிர், கலையரசன், ஓவியா நடிப்பில் வெளியான 'மதயானைக் கூட்டம்' படத்தை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன்.
இதனையடுத்து, இயக்குநர் விக்ரம் சுகுமாரன் நடிகர் சாந்தனுவை வைத்து 'இராவண கோட்டம்' என்ற புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது படத்தில் நாயகியாக நடிக்க நடிகை ஆனந்தி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தச் செய்தியை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ‘இராவண கோட்டம் டீம்-க்கு உங்களை வரவேற்கிறோம். நடிகை ஆனந்தி கதைகளை தேர்ந்தெடுப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
விக்ரம் சுகுமாரன் சில வருட இடைவெளிக்கு பின் இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.