தேசிய ஊரடங்கு உத்தரவால் இளைஞர்கள் வெளியே போகமால் அரசுக்கு உதவவேண்டும் என நடிகை அமைரா தஸ்தூர் கூறியுள்ளார்.
தனுசுடன் 'அனேகன்' படத்தில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். அதன்பிறகு நடிகர் ஜீவி பிரகாஷுடன் 'காதலை தேடி நித்தியனந்தா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதனையடுத்து அமைரா படங்களில் நடிக்கவில்லையென்றாலும் 'தி ட்ரிப்' என்ற தொடர் மூலம் வெப் சீரிஸில் அடியெடுத்து வைத்து அடுத்ததாக 'தில்லி' தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது தனியார் விலங்கு உணவு பிராண்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தேசிய ஊரடங்கு உத்தரவை மோடி அமல்படுத்தியுள்ளார். இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசும் திரைப்பிரபலங்களும் கூறி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அமைரா தனது ட்விட்டர் பக்கத்தில், "கொஞ்சம் மாத்தியோசிச்சு பாருங்க. இந்த தொற்று இளைஞர்களை அதிகமாக தாக்கி அவர்கள் இறக்க நேரிட்டால் நம் பெற்றோரும் நம் தாத்தா பாட்டியும் நம்மை பாதுகாக்க என்ன வேண்டுமாலும் செய்வார்கள். அவர்கள் உயிரைப் பணயம் வைக்க கூட தயங்கமாட்டார்கள். இப்போது இது எங்கள் முறை. அவர்களை பாதுகாக்கவும் எங்கள் அன்பை நிரூபிக்கும் தருணம். தயவு செய்து வீட்டில் இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த ட்வீட் இணையவாசிகளால் வெகுவாக கவரப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.