தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டாய்லெட் பேப்பர் வைத்து மகனுடன் உடற்பயற்சி செய்த எமி ஜாக்சன் - Amy Jackson work out video

நடிகை எமி ஜாக்சன், டாய்லெட் பேப்பர் வைத்து தனது மகனுடன் உடற்பயிற்சி செய்துள்ளார்.

டாய்லெட் பேப்பர் வைத்து மகனுடன் உடற்பயற்சி செய்த எமி ஜாக்சன்
டாய்லெட் பேப்பர் வைத்து மகனுடன் உடற்பயற்சி செய்த எமி ஜாக்சன்

By

Published : Mar 24, 2020, 8:47 AM IST

Updated : Mar 24, 2020, 12:16 PM IST

இங்கிலாந்தைச் சேர்ந்த மாடலான எமி ஜாக்சன், தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடித்த அவர் விக்ரமுடன் தாண்டவம், ஐ, தெறி போன்ற படங்களிலும் நடித்தார்.

இவர் ஜார்ஜ் பெனாய்டோவை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் குழந்தைக்கு தாயானார். இதையடுத்து அடிக்கடி தனது மகனுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் எமி ஜாக்சன் தனது மகனுடன் இணைந்து டாய்லெட் பேப்பர் வைத்து உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெறும் டாய்லெட் பேப்பர் வைத்துக்கொண்டு விதவிதமாக இவர் செய்யும் வொர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகியுள்ளது.

மேலும் இதைக்கண்ட நெட்டிசன்கள், "உலகம் முழுவதும் கரோனா தொற்று நோயால், அவதிப்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற வீடியோ தேவையா" என்று கலாய்த்துள்ளனர் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட எமி ஜாக்சன் அடிக்கடி தனது வொர்க்கவுட் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'கரோனா மாதிரி திடீர், திடீர்னு கிளப்புறாங்க'- போலி கணக்கு குறித்து வடிவேலு!

Last Updated : Mar 24, 2020, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details