இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்சன் 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் பிரபலமானார். இவர்தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவந்தார். அண்மையில், இவர் நடிப்பில் வெளிவந்த '2.0' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கடந்த ஜனவரி மாதம் தனது காதலன் ஜார்ஜுக்கும் எமி ஜாக்சனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியே செல்லும்போது தான் எடுக்கும் கவர்ச்சிப்புகைப்படங்களை எமி ஜாக்சன்வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்துவருகிறது.