தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரத்தான கேன்ஸ் திரைப்பட விழா: நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட எமி - ரத்தான கேன்ஸ் திரைப்பட விழா

கரோனா தொற்று அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கேன்ஸ் திரைப்பட விழாவைல் கெளரவிக்கும் விதமாக நடிகை எமி ஜாக்சன் கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Amy Jackson
Amy Jackson

By

Published : May 20, 2020, 1:25 PM IST

கரோனா தொற்று காரணமாக பிரபல திரைப்பட விழாவான கேன்ஸ் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக சினிமாக்களில் ஆஸ்கர் விருது விழாவுக்குப் பின் அதிகம் கவனிக்கப்படுவது கேன்ஸ் விழா. இவ்விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் சிட்டியில் நடைபெறும்.

இதில் விருது வாங்கும் படங்கள் தரமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. இந்தாண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா மே 12 முதல் மே 28 வரை நடைபெறவிருந்தது. இதனையடுத்து 73ஆவது கேன்ஸ் திரைப்படவிழா, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக விழாக் குழு அறிவித்தது.

இதனையடுத்து எமி ஜாக்சன் கடந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழாவைக் கெளரவப்படுத்தி உள்ளார்.

அதில், ”கேன்ஸ் யூ நாட்! இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்ட திரைப்பட விழாவில் இதுவும் ஒன்று. கிழக்கு முதல் மேற்கு வரை உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தயாரிப்பில் உள்ள படங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு இந்த விழாவில் நான் கலந்துகொண்ட சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details