தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதலரை விட்டுப் பிரிந்தாரா எமி ஜாக்சன்? - amy jackson personal life

நடிகை எமி ஜாக்சன் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியதால், அவரை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

By

Published : Jul 28, 2021, 4:17 PM IST

இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன், தமிழில் 'மதராசப்பட்டினம்', 'தாண்டவம்', 'ஐ', 'தெறி', '2.0' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் பெனாய்ட்டோவை காதலித்து வந்த எமி ஜாக்சனுக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எமி அவரது காதலருடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் சமூக வலைதளங்களிலிருந்து தற்போது நீக்கியுள்ளார்.

இதனால் அவர் காதலரை விட்டுப் பிரிந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. எனினும் இதுகுறித்து எமி ஜாக்சனிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திடீர் திருப்பங்கள் நிறைந்த 'திட்டம் 2': விமர்சகர்கள் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details