தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நிறைமாத கர்ப்பிணி 'மிஸ் டீன்' ஏமி ஃபோட்டோ வைரல்! - amy

நடிகை ஏமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக செய்த ஃபோட்டோ ஷூட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Amy Jackson

By

Published : Sep 14, 2019, 6:35 PM IST

மிஸ் டீன் வேர்ல்டு பட்டம் வென்ற ஏமி ஜாக்சன் 'மதராசப்பட்டினம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் 'தாண்டவம்', 'ஐ', 'தங்கமகன்', 'கெத்து', 'தெறி' என்று தலைகாட்டிய அவர் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான ’2.0’ படத்தில் நிலா என்ற பெயரில் பெண் ரோபோவாக நடித்தார். அந்தப் படத்துக்கு பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சில மாதங்களில் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டு விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஏமி ஜாக்சன், தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து ஆண் குழந்தைக்கு, தான் தாயாகப் போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது நிறைமாதத்தை கொண்டாடடும் விதமாக லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் நடத்தினார். அந்த ஃபோட்டாவும், ஃபோட்டோ ஷூட் செய்த வீடியோவும் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டுவருகின்றது.

ABOUT THE AUTHOR

...view details