’மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதற்கு பிறகு 'தாண்டவம்', 'ஐ', 'தெறி', '2.0' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோவை காதலித்து ஆண் குழந்தைக்கு தாயானார்.
இதையடுத்து அடிக்கடி தனது மகனுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் எமி ஜாக்சன் தற்போது புதிதாக டிக் டாக் செயலியில் களமிறங்கியுள்ளார். தற்போது கரோனா வைரஸால் தனிமையில் இருப்பதால் இதில் களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.