பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரைத்தொடர்ந்து, அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஷ்வர்யா ராய், அவர்களது மகள் ஆராதயா ஆகியோருக்கும் கரோனா இருப்பது உறுதியானது.
'இந்த குணங்கள் இருப்பவர்களிடம் விலகி இருக்கவும்' - அமிதாப் பச்சன்! - அமிதாப்பச்சன் படங்கள்
நடிகர் அமிதாப் பச்சன் கோபம், பொறாமை உட்பட்ட ஐந்து எதிர்மறை எண்ணங்கள் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அமிதாப்பச்சன்
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது சமஸ்கிருதம் வசனத்தை குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் "மன நிறைவின்மை, கோபம், பொறாமை, வெறுப்பு மற்றும் சந்தேகம் ஆகிய ஐந்து எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட மனிதர்களிடம் இருந்து விலகி இருப்பதே சிறந்தது" என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Last Updated : Jul 17, 2020, 3:08 PM IST